அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு

அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க (2) 
உன் தாயின் உதிரத்தால் உனைத் தெரிந்தார் 
உன் வாழ்வில் உறவாய் உன்னில் இணைந்தார் 

1. தீயின் நடுவே தீமை இல்லை 
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை 
தோல்வி நிலையில் துவண்டு வாழும் 
துன்பம் இனியும் தொடர்ந்திடாது 
காக்கும் தெய்வம் காலமெல்லாம் -2 
கரத்தில் தாங்கிடுவார் அன்பின் கரத்தில் தாங்கிடுவார் 

2. தூர தேசம் வாழ்க்கைப் பயணம் 
தேவன் நேசம் உன்னைத் தொடரும் 
பாவம் யாவும் பறந்து போகும் 
பரமன் அன்பில் பனியைப் போல 
வாழும் காலம் முழுதும் உன்னில் -2 
வசந்தம் வீசிடுமே அன்பின் வசந்தம் வீசிடுமே