அமைதியைத் தேடியே என் மனம் பாடுது - 2
இறை அருளினிலே அவர் உறவினிலே அது
உண்மையை நாடுது அதில் முழுமையைத் தேடுது
1. தாய்மடி தவழுகின்ற சிறு குழந்தை அன்னை மடியில்
அமைதி காணும் நிறைவு கொள்ளும் இன்பம் பெருகுமே
வளர்ச்சியின் வேகத்திலே சுமையே சுகமாய் பகையே உறவாய்
இருளே வாழ்வாய் இறுகிப்போகுதே மாறுமா இதயமே
மழலை உள்ளமே இந்த மானிடம் தேடுமே -2
மழலையின் மனதினைத் தா உன் அமைதியும் அருளையும் தா
2. தான் என்ற நிலை அழிந்து வாழும் நெஞ்சில் தாய்மை மலரும்
நேயம் நிறையும் வாய்மை வெல்லும் நீதியும் நிலைக்குமே
சுயநல மேகங்களும் சூழும் நெஞ்சில் பகைமை வளரும்
பாவம் பெருகும் இறைமை குறையும் மனிதம் மலருமே