அமைதியின் தூதனாய் இறைவா

அமைதியின் தூதனாய் இறைவா 
என்னை ஆக்கிடவேண்டும் தேவா (2) 
மனநிலம் அமைதியில் தவழ்ந்துவிட்டால் - இந்த 
மாநிலம் அமைதியில் மகிழும் - 2 

1. வேருக்கு அமைதி நீர் கொடுக்கும் - பறவை 
வயிற்றுக்கு அமைதி கனி கொடுக்கும் (2) 
நிலத்துக்கு அமைதி மழை கொடுக்கும் - 2 
என் நெஞ்சுக்கு அமைதி நீ அருள்வாய் - 2 

2. பாட்டுக்கு அமைதி சுரம் கொடுக்கும் - சின்னப் 
பாலர்க்கு அமைதி தாய் கொடுப்பாள் (2) 
பாருக்கு அமைதி யார் கொடுப்பார் -2 
பெரும் பாவிக்கு அமைதி நீ அருள்வாய் - 2