உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்

என் நம்பிக்கை பலமானதே

ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன்

என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்

என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்

அய்யா நீரே என் கடவுள்


1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன

கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்

காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்

விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்

நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்


2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை

உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்

இனி மாறாது மறையாது என் நம்பிக்கை

அடி பிறழாது சிதையாது இறைமாளிகை

உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை

அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை