ஆண்டவரை நான் நம்பியுள்ளேன் அவர் துணையை தினம் நாடுகிறேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரை நான் நம்பியுள்ளேன்

அவர் துணையை தினம் நாடுகிறேன்

ஆண்டவர் தாமே என் வலிமை

அவரே எனது அருட்துணையாம்

ஆதி அந்தமாய் வாழும் தேவனின்

புகழினைப் பாடிடுவேன்

நாளும் பொழுதெனை வாழச் செய்திடும்

அன்பரைப் போற்றிடுவேன்


1. உடலும் உயிரும் தளர்ந்திட்ட போதும்

உமது பேரன்பில் உளமகிழ்வேன்

எனது துன்பம் அறிந்திருக்கின்றீர்

எதிரியின் கையில் நின்று எனைக் காப்பீர்

ஆதி அந்தமாய் வாழும் தேவனின்

வாழும் புகழினை நாளும் பாடுவேன்


2. கலங்கி அழுது கதறும் வேளை

கடவுளே உனதருள் கெஞ்சி நின்றேன்

என் குரல் கேட்டீர் அரவணைத்தீர்

ஏழை என் விழிநீர் துடைத்துவிட்டீர்

ஆதி அந்தமாய் வாழும் தேவனின்

வாழும் புகழினை நாளும் பாடுவேன்