தாயே உன் பாத மலரினிலே என்றும்

தாயே உன் பாத மலரினிலே என்றும்
வாடாத மலராக நானிருப்பேன் (2)
தாயென்னை மறந்தாலும் நீ மட்டும் நாளும்
சேயாக அணைக்கின்ற தாய்மரி நீயே (2)


1. 

கல்வாரி மலைமேலே நமக்கான உறவால்
கனிவோடு வந்தாயே தாய் என்ற நினைவால் (2)
கடலினும் பெரியது உன் உள்ளம் அம்மா - 2
கடுகினும் சிறிய எம் துயர் தீர்ப்பாயே


2. 

துன்பத்தின் ஆழத்தைக் கண்டவள் நீயே
துன்புற்ற போதும் துவளாத தாயே (2)
வாழ்க்கையின் நெறிமுறை எமக்குரைத்தாயே -2
வாவென பார்வையில் எனை அழைத்தாயே