அய்ந்தைந்து ஆண்டுகள் பொன் போலப் பொதிந்தென்னைக்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அய்ந்தைந்து ஆண்டுகள் பொன் போலப் பொதிந்தென்னைக்

கை மீது வைத்திருந்தாய்

தெய்வீகப் பாதையில் அன்பான சேவையில்

என்னை நீ காத்து வந்தாய்

நாள்தோறும் பலியில் நான் வாழும் நெறியை

நல்லாயன் காட்டி நின்றாய்


1. முன்வந்த என்னை உனதாக்கினாய்

உன் கையில் வாழ்வைப் புதிதாக்கினாய்

வெறும் கல்லும் கனியாகி சிறு சொல்லும் கவியாகி

அகல் கூட நிலவாகி வெயில் தந்ததே - உன்

அருளால் என் பணி கூட பலன் தந்ததே


2. லால்லால்லலா லலலால்லலா

லலலால்லலா லலலால்லலா

இன்பத்தில் துன்பத்தில் துணையாகினாய்

என் சேவை அனைத்துக்கும் பொருளாகினாய்

விழிநீரைத் துடைக்கின்ற விரல் காணும் இதம் போல

வழி எங்கும் பணிசெய்து நிறைகாணவே - உன்

அழியாத மகிழ்வாலே எனை மூடினாய்