குருத்துவப் புகழ் ஓங்கவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குருத்துவப் புகழ் ஓங்கவே

செந்தமிழ் நாவில் எழுந்த இப்பாவில்

சிறந்த நம் திருமறைத் தொண்டர்கள் வாழியவே

பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவும்

பலரின் வாழ்வுக்குப் பலியாய் வாழவும்


1. காவிரி தென்பெண்ணை பாய்ந்து வரும் - வண்ண

பூவிரிச் சோலைகள் பூத்து நிற்கும் ஆ

வங்கக் கடல் அலைகள் தாலாட்டும் ஆ

தங்கத் திருநாடாம் தமிழக மண்ணதில்

எங்கும் இயேசு எனும் நாமம் முழங்கிட(வே)


2. இயல் இசை நாடக அரங்கினிலே - உயர்

இலக்கியம் எழுந்திடும் ஏட்டினிலே ஆ

தாயகப் பண்பாட்டின் சிறப்பினிலே ஆ

ஆயக் கலைகளெனும் அறுபத்து நான்கிலும்

நாயகன் இயேசுவின் நற்செய்தி ஒலித்திட(வே)