ஆராதனை செய்கின்றேன் இறைவா ஆராதனை செய்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆராதனை செய்கின்றேன் இறைவா

ஆராதனை செய்கின்றேன் (2)

மகிழ்ச்சியிலும் மனத் தளர்ச்சியிலும்

அன்பு தெய்வமே உமக்கே என்றும்


1. கரம் பிடித்து உடன் நடந்து பாசமொழி பேசிவந்தாய் - 2

தனிமையை தகர்த்தெறிந்தாய் இறைவா உமக்கே ஆராதனை

துணிவுடனே உனைத் தொடர இறைவா ஆராதனை

என்றும் உமக்கே ஆராதனை


2. உனதருகில் நானமர்ந்து வேதனையைச் சொல்லிடுவேன் -2

ஆறுதல் தந்திடுவாய் இறைவா உமக்கே ஆராதனை

சிறகினிலே சுமந்திடுவாய் இறைவா ஆராதனை

என்றும் உமக்கே ஆராதனை