தபசு காலம் அழைக்குதையா மனந்திரும்பு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தபசு காலம் அழைக்குதையா மனந்திரும்பு

ஐயா மனம்திரும்பு அம்மா மனந்திரும்பு

நம்ம எல்லாருக்கும் நல்ல சேதி மனந்திரும்பு

சந்தோசமா மனந்திரும்பு (2)


1. இரக்கத்தின் காலமிது மனந்திரும்பு ஐயா மனந்திரும்பு - 2

நம்ம இறையரசு நெருங்குதையா

மனந்திரும்பு விரைந்து மனந்திரும்பு

மன்னிப்பின் காலமிது மனந்திரும்பு அம்மா மனம்திரும்பு 2

உங்க மனசாட்சி குரல் கேட்டு

மனந்திரும்பு முழுசா மனந்திரும்பு


2. சாதிவெறிய விட்டு நீயும் மனந்திரும்பு ஐயா மனந்திரும்பு - 2

எல்லாம் சமத்துவமா வாழ்ந்திடலாம்

மனந்திரும்பு சமத்தா மனந்திரும்பு

மதவெறிய விட்டு நீயும் மனந்திரும்பு அம்மா மனந்திரும்பு 2

இங்கு மனுசன்தானே முக்கியமுன்னு

மனந்திரும்பு உணர்ந்து மனந்திரும்பு


3. ஊதாரிமைந்தன் போல மனந்திரும்பு வருந்தி மனந்திரும்பு - 2

அந்தநல்ல கள்வன்போல நீயும்

மனந்திரும்பு துணிந்து மனந்திரும்பு

சக்கேயு செய்ததுபோல் மனந்திரும்பு திருந்தி மனந்திரும்பு - 2

நல்ல மதலேனம்மா மனசுபோல

மனந்திரும்பு அழுது மனந்திரும்பு