ஆயிரக்கணக்கான வருடங்களாய்

ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்
ஓசான்னா தாவீதின் புதல்வா 
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா


1. 

மாமரி வயிற்றினில் பிறந்தவரே
மாமுனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தினில் உதித்தவரே எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா


2. 

மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனி சூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே


3. 

அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்


4. 

தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே எழுவீரே


5. 

கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக்
கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்


6. 

புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுந்தீனீர் அருள்மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வார்Pர் படைத்தவரே


7. 

மரித்தவர்கள் அநேகர் உயிர்பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே


8. 

குருடர்கள் பலர் உயிர் பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீர்


9. 

யூதேயா நாட்டினில் புகழ் பெற்றீர் - எம்
யூதர் ராஜரென்று முடிபெற்றீர்
எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்


10. 

பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே


11. 

கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெய கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே


12. 

உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே