முன்னாள் வனத்தில் நீர் மன்னா ஈந்தீர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


முன்னாள் வனத்தில் நீர் மன்னா ஈந்தீர்

இன்னாள் எம் அன்னமாய் உம்மை ஈந்தீர்

நேசாதி நேசனே ஆசார தேவனே 

இராஜாதி இராஜனே நாளும் தோத்ரம்


1. ஓர் திரை மேகத்தே ஜோதி மறைத் 

தோதினீர் கற்பனை மோயீசற்கே


2. நாதா நும் ஜோதியை மா அப்பத்தே 

ஏதுக்காய் மறைத்தீர் மீண்டும் இப்போ


3. தாபோர் மலையில் நும் நேர் உருவம் 

பார்க் கொண்ணா துள்ளியோ நீர் ஒளித்தீர்


4. எம்பால் நீர் காட்டும் மா அன்பிற்கீடாய் 

எம்பணி ஆற்றினோம் அன்பிலார் யாம்


5. பூங்காவில் நீர் மிக ஏங்கி வாட 

பாங்காய் ஓர் ஆறுதல் தந்தோமில்லை


6. ஓங்கும் சிலுவையில் ஏங்கும் போதும் 

ஆங்கோர் ஆறுதல் யாம் ஆற்றவில்லை