உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உம் பணிவாழ்வையே எங்கள் அகலாக ஏற்று

அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம்

அன்பென்னும் கொடையால் மனித வாழ்வை

அழியா உறவில் இணைக்கும் பணியை

நிறைவாய் வாழ்ந்த இறைமைந்தனே

எங்கள் அருள்வாழ்வின் வழிகாட்டியே


1. சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர்

வறியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர்

உலகின் இடர்களை வென்றிடவே - இறை

சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே

நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில்

புதிதாய் உலகை மாற்றினீரே


2. தந்தையின் அன்பினைப் பகிர்ந்தவரே - இறை

ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே

ஆயிரம் ஆயிரம் புதுமைகளால் - அன்று

எளியவர் மனதை ஆட்கொண்டீர்

வாழ்வெனும் கடலில் அன்பெனும் படகாய்

என்னிலே வாழ்ந்திடும் பரம்பொருளே