மாதாவே சரணம்

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே - கன்னி...

1. மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் - 2
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் - 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்

2. நானிலத்தில் சமாதானமே நிலவ
நாஸ்திக உலகம் ஆஸ்திக மடைய - 2
உடல் உயிர் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2
உன் இருதயத்தில் இன்றெமை வைப்போம்