நற்கருணைப் பந்தியிலே அமர்ந்திடுவோம் வாரீர்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நற்கருணைப் பந்தியிலே அமர்ந்திடுவோம் வாரீர் - 2

நாம் நன்றியோடு திருவுணவை அருந்திடுவோமே (2)


1. பக்தியோடு உணவை உண்டு வாழ்வு அடையலாம் நாமும்

சக்திபெற்று வாழ்வில் ஓங்க வழியும் பிறக்கலாம் (2)

என்னை உண்டு வாழ்பவர்கள் என்றும் நிலைப்பார் -2

என்று இயேசு சொன்ன பொன்மொழியை விசுவசிப்போமே


2. இனிமையான விருந்து ஒன்றை இயேசு படைத்தார் நாமும்

இன்புறவே வாழவேண்டும் என்று நினைத்தார் (2)

வானின் உணவை உண்பவர்கள் என்றும் அழியார் -2

என்று வானரசும் கூறியதை வாழ்ந்து காட்டுவோம்