கொண்டாடுவோம் திருவிருந்து நம்மை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கொண்டாடுவோம் திருவிருந்து நம்மை

ஒன்றாக்கும் ஒற்றுமை விருந்து (2)

நம் தேவ தந்தை தனையன் ஆவி

ஒன்றாக இருப்பதுபோல் இணைந்து


1. வானகத் தந்தை தரும் வாஞ்சையின் விருந்து இது - நம்

மீட்பினைப் புதுப்பிக்குமே ஆவியில் உயிர்ப்பிக்குமே (2)

நம் தந்தை அவரே உரிமை மைந்தர் நாம்

எல்லோரும் சோதரர் என்றாகுவோம்


2. புலர்ந்திடும் புது உலகின் நலம் தரும் விருந்து - இது

நம் பார்வையை விரிவாக்கும் பாதையை தெளிவாக்கும் (2)

நாம் யாவரும் இயேசுவின் சொந்தங்களே

அவருடன் எல்லாம் அங்கங்களே

சுரங்களின் சங்கமமே சுந்தர இசையாகும் - நம்


3. கரங்களின் சங்கமமே அன்பின் பிறப்பாகும் (2)

அந்த வரந்தரும் இயேசுவின் பந்தியிலே

வாருங்களே ஒன்று சேருங்களே