வானின் அமுதே வா எம் வாழ்வின் உயிரே வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வானின் அமுதே வா எம் வாழ்வின் உயிரே வா

தேனின் இனிமை தேங்கும் சுனையே

தேற்றும் உணவாய் வா


1. வாழ்விக்கும் நல்லாயன் இயேசுவே நீர்

உம்மிலே வாழ்கின்ற ஆடுகள் யாம்

பொல்லாத ஆடு போல் சிதறினாலும் - உம்

மந்தையில் சேர்ப்பாயே நல்லாயனே


2. வாழ்வோடு சாவும் போரிடவே

வானவர் வியக்க நீ எழுந்தாய்

எம் வாழ்வின் பொருளே நீயல்லவா

எம் வாழ்வின் வழியும் நீயல்லவா