தூய ஆவியே வருக மனத்துணிவும் ஒளியும் தருக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தூய ஆவியே வருக மனத்துணிவும் ஒளியும் தருக

நேயத் தந்தையின் கொடையே

எங்கள் நெஞ்சில் என்றும் உறைக


1. அன்பின் ஊற்றே வருக இறை அன்பை எம்முள் பொழிக

துன்பம் யாவும் தாங்க உம் துணையை எமக்கு அருள்க


2. தேற்றும் சுடரே வருக தினம் தெளிவும் அறிவும் தருக

போற்றும் மனமே தருக உம் புகழே நாவில் திகழ