உந்தன் திருப்பெயர் சொல்லி அழைப்பேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உந்தன் திருப்பெயர் சொல்லி அழைப்பேன்

மாதாவே மரியன்னையே

உன்னை நினைந்துருகியே மகிழ்வேன்

என்னிதயத்தில் நீ வாழ்கவே (2)


1. மாதா உன் பெயர் சொல்லி நான் பாடும் போது

ஆறாத துன்பங்கள் ஆறாக ஓடும் (2)

அடைக்கலமாதா அலங்கார மாதா

அமலோற்பவ மாதா அருள் ஒளி மாதா ஆரோக்கிய மாதா

ஆறுதல் மாதா இருதய மாதா இன்னருள் மாதா

உலகின் மாதா உப்பரிகை மாதா லூர்து மாதா

விண்ணரசி மாதா வியாகுல மாதா விடிவெள்ளி மாதா

வாடிப்பட்டி மாதா வேளாங்கண்ணி மாதாவே


2. மாதா உன் பெயர் சொல்லி நான் பாடும் போது

தீராத துன்பங்கள் மெழுகாக உருகும் (2)

கருணை மாதா கண்ணீர் மாதா கார்மேல் மாதா

காணிக்கை மாதா மழைமலை மாதா மாசில்லா மாதா

பனிமய மாதா பரலோக மாதா பாத்திமா மாதா பூண்டி மாதா

வெற்றி மாதா செபமாலை மாதா சலேத்து மாதா சந்தன மாதா

சந்தோச மாதா சகாய மாதாவே