♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் தேவன் வருகின்றார் என்னுள்ளம் நிறைகின்றார்
என் தேவன் என்னில் வருகின்றார்
உணவாக தன்னைத் தருகின்றார் (2)
துன்பத்திலும் வருகின்றார் நோய்களிலும் வருகின்றார் - 2
இறை அன்பை அள்ளித் தருகின்றார் -2
1. அன்புநெறி சிறந்ததென அகிலமெலாம் அறிவித்த
பாசமிகு நம் தேவன் என்னில் வருகின்றார்
வருகின்றார் வருகின்றார் என் தேவன் வருகின்றார் (2)
இறைவனின் அரசை விதைத்திடுவோம்
நிறைவினைக் காணப் புறப்படுவோம்
நாளுமே உம்மிலே நாங்கள் வாழ வரமருளும்
2. வாழ்வும் ஒளியும் வழியுமாக வாழ்வு கொடுக்கும் நண்பனாக
தியாகமிகு என் தேவன் என்னில் வருகின்றார்
வருகின்றார் வருகின்றார் என் தேவன் வருகின்றார் (2)
கவலைகள் தீரும் உம் அருளால்
கருணை இருக்கும் உம் வரவால்
நாளுமே உம்மிலே நாங்கள் வாழ வரமருளும்