தேவன் என்னைத் தேடி வரும் நேரம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவன் என்னைத் தேடி வரும் நேரம்

ஆனந்த கவிதை இதயத்தில் அரங்கேறும் (2)

அந்த இதயம் பாடும் புது கீதம்

இந்த உலகம் காணும் புது உதயம் (2)


1. வானம் பார்க்கும் பூமியைப்போல் என்

மனமும் உன்முகம் பார்க்கின்றதே (2)

அருளின் முகிலே வா அன்பின் மழையே வா

நினைவினில் நிதம் நான் வாழ்ந்திடவே

நிறைவினில் உறவுகள் மலர்ந்திடவே (2)


2. நீரினை நாடும் மான்களைப்போல

என் நெஞ்சம் உன் அகம் தேடுதே (2)

நீதியின் கதிரே வா தீதில்லா திருவே வா

இழப்பதில் இன்பம் கண்டிடவே

இகமெல்லாம் ஒன்றெனக் கொண்டிடவே (2)