இறைவா இறந்தவர்க்கமைதி தாரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா இறந்தவர்க்கமைதி தாரும்

மனமிரங்கி உன் திருவடிதனில் சேரும் ஓ...


1. வாழ்வென்னும் பயணம் முடிந்து விட - மறு

வாழ்வின்று இவர்க்கு தொடங்கிடட்டும்

கல்லறையில் இவர் உடல்செல்வார்

இல்லத்தில் ஆன்மா இடம் பெறட்டும்

இறைவா இறைவா - 2


2. உம்வழி உலகில் தினம் நடந்து என்றும்

உம்பணி செய்தவர் இவர் இறைவா

நன்று என் மகளே வாவென்று நீர்

நடத்திச் செல்வீர் உம் வீட்டினுக்கே

இறைவா இறைவா - 2