♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வானக அப்பமே வரவேண்டும்
இவ்வையக உணவே வரவேண்டும்
விண்ணக உணவைத் தரவேண்டும் நான்
உன்னுடன் வாழும் வரம் வேண்டும்
1. உள்ளத்தில் உனக்குக் கோயில் செய்தேன் அதில்
உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் (2)
அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் -2 அங்கு
வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் - 3
2. பொன்னும் பொருளும் நிலமெல்லாம் பெரும்
பெயரும் சீரும் சிறப்பெல்லாம் (2)
உன்னோடு உறவு இல்லையெனில் -2 அதைப்
பெற்றாலும் எனக்கு பயன் என்ன - 3