♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உயிர்ப்போம் - 3 உண்மை இறைவனில் உயிர்ப்போம்-2
நிலைப்போம் - 3 நன்மை செய்வதில் நிலைப்போம் -2
1. வாழ்வு தருகின்ற வார்த்தையாய் உயிர்ப்போம்
வறுமை போக்கிட வளமையாய் உயிர்ப்போம் (2)
பிரிந்த மனங்களை இணைத்திட உயிர்ப்போம் - 2
விரிந்த இதயமாய் வாழ்ந்திட உயிர்ப்போம்
வார்த்தையாய் உயிர்ப்போம் வளமையாய் உயிர்ப்போம்
இணைந்திட உயிர்ப்போம் வாழ்ந்திட உயிர்ப்போம்
2. உயிர்ப்பின் மாண்பினை முழங்கிட உயிர்ப்போம்
உரிமை வாழ்வினை வழங்கிட உயிர்ப்போம் (2)
உலகின் ஒளியாய் வழியாய் உயிர்ப்போம் - 2
உண்மை அன்பின் சாட்சியாய் உயிர்ப்போம்
முழங்கிட உயிர்ப்போம் வழங்கிட உயிர்ப்போம்
வழியாய் உயிர்ப்போம் சாட்சியாய் உயிர்ப்போம்