தயை நிறை தாயே அரசியே வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தயை நிறை தாயே அரசியே வாழ்க

எங்கள் வாழ்வின் தஞ்சம் நீயே

இப்பரதேச ஏவையின் மைந்தர்

உம்மையே நோக்கி அழைக்கின்றோமே


1. தண்ணீர் சூழ்ந்த உலகினின்று

கவலை மிகுந்து கண்ணீர் சிந்தி

உம்மையே நோக்கிப் பெருமூச்செறிந்தோம்

தயை நிறை கண்களை எம்மேல் திருப்பும்


2. எமக்காய் என்றும் பரிந்திடும் தாயே

வாழ்வின் முடிவில் உம் திருக்கனியாம்

திவ்ய இயேசு தரிசனம் தாரும்

தயையே அன்பே கன்னி மரியே