கல்வாரிக்குப் போகலாம் வாரீர்

கல்வாரிக்குப் போகலாம் வாரீர் - 2 என்
காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட


1. 

பொல்லாப் பகைவர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனை கொல்லும் வாதை காண (2)


2. 

சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முள்முடி பூண்டு
தவத்தில் உயர்ந்த ஞானன் தவிக்கும் முகத்தைப் பார்க்க (2)


3. 

பாரச் சிலுவைதனை தோளில் சுமந்து - மிகக்
கொடுமையாய் இருக்கின்ற கொடூரத்தை பார்த்திட (2)