♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே
தாசர்க் குதவியே நேசர்க் கருள்வாயே
1. மானிடர்க் குற்ற சாபம் மாதுனக் கிலையே
ஆனந்தப் பிரதாபம் ஆனதுன் நிலையே
2. சா தந்த கனியாலே சாபமும் அழிவும்
நீ தந்த கனியாலே நேசமும் உயிரும்
3. பாசஞ்செய் பிசாசான பைய ரவதனை
நாசமாய் குதிங்காலால் நைந்திட மிதித்தாய்
4. ஏவையின் பழியாலே ஏக்கமுந் துயரும்
தேவன்னை வழியாலே தீரும் எப்பழியும்
5. இக்கண்ணீர்க் கணவாயில் ஏழை கட்கிரங்கி
இக்கட்டு வரும்போது எம்மண்டை வருவாய்
6. இந் நிலந்தனில் ஓயா இன்னிசை தொனியாய்
பண்ணிசைத் துதிமேவும் பாக்கிய வதியே