♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
புதுயுகம் காண புறப்படும் நமக்கு
புத்துணர்வூட்டும் விருந்து நம் பயணத்தின் பாதையில்
நெடுகிலும் நெஞ்சில் ஊக்கமளித்திடும் விருந்து (2)
இனிய விருந்து இதய விருந்து
இயேசு விருந்து அன்பின் விருந்து (2)
1. பகிர்ந்து வாழும் பண்பினை உலகில்
போற்றி வளர்க்கும் விருந்து - இது
பரிவுடன் அயலார் சுமையினைத் தாங்கும்
பக்குவம் தருகின்ற விருந்து (2) - இனிய விருந்து ... ...
உடைந்துபோன உறவுகள் மீண்டும்
உயிர்பெறச் செய்யும் விருந்து - இது
பிறரது தவறை மன்னித்து வாழும்
பெருங்குணம் அளிக்கும் விருந்து (2) - இனிய விருந்து ... ...
2. அன்புடன் இறைவனை அப்பா என்று
அழைத்து மகிழும் விருந்து - இது
அனைவரும் அவரது பிள்ளைகள் என்ற
ஆனந்த நிலை காணும் விருந்து (2) - இனிய விருந்து ... ...