♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கல்வாரி சிகரமதில் கல்நெஞ்சக் கயவர்களால்
கருணையின் உருவம் கனிவான தெய்வம்
சிலுவையில் தொங்கும் என் இயேசுவைப் பார்
1. தீர்ப்பிடா என்று சொன்ன - என்
இயேசுவின் நிலைமையைப் பார்
குருதியில் நனைந்திருக்கும்
இயேசுவின் முகத்தினைப் பார்
பிலாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிற்பதைப் பார்
2. பிறருக்கு உதவி செய்த - என்
இயேசுவின் கரங்களைப் பார்
ஆணிகள் துளைத்திடவே
ஆண்டவர் துடிப்பதைப் பார்
அயலானை மன்னித்து தந்தையின் கரங்களில்
ஆவியைத் துறப்பதைப் பார்