சந்திப்பு நிகழுதம்மா தாயின் சந்திப்பு நிகழுதம்மா

சந்திப்பு நிகழுதம்மா தாயின் சந்திப்பு நிகழுதம்மா - 2
கல்வாரி செல்லும் பாதையிலே கழுமரம் சுமந்த பார்வையிலே


1. 

குழந்தையின் துன்பம் கண்டு கலங்காத அன்னையில்லை -2
ஆறுதல் சொல்வதற்கோ வார்த்தைகள் ஏதுமில்லை
அன்னையின் பார்வையில் நம்பிக்கை தீபம்
இயேசுவின் நெஞ்சினில் வலிமையின் வேதம் -2


2. 

வாழ்வினில் துன்பம் கண்டு துவளாத நெஞ்சமில்லை 2
ஆறுதல் கிடைத்தாலும் உள்ளங்கள் தெளிவதில்லை
அன்னையின் பார்வையில் நம்பிக்கை தீபம்
அவளது சந்திப்பில் வலிமையின் வேதம் - 2