நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம்

கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ


1. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்

நான் என்ன கைம்மாறு செய்வேன்

மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து

ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்


2. ஆண்டவர் தம் அடியாரின் மரணம்

அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது

ஆண்டவரே நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன்

என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்


3. புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்

ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்

ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும்

அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்