நாள்தோறும் நான் சுமக்கும் சிலுவைகளே

நாள்தோறும் நான் சுமக்கும் சிலுவைகளே
நான்வாழ எனைத் தடுக்கும் சிலுவைகளே (2)
சிலுவை நாயகன் இயேசுவின் துணையில்
நானும் உங்களை எதிர்கொள்வேன்
சிலுவை நாயகன் இயேசுவின் துணையில்
நானும் உங்களை வென்றுயிர்ப்பேன்

1. அடுத்தவர் நலன்கருதி நன்மை செய்ய வரும்போது
அடுக்கடுக்காய் வரும் சிலுவைகளே (2)
ஆண்டவன் வழியினிலே நடந்திடும்பொழுதினிலும்
தடுத்துவிழச் செய்யும் சிலுவைகளே (2)
தடுத்துவிழச் செய்யும் சிலுவைகளே

2. நீதி நேர்மையுடன் உழைத்திட வரும்போது
நேர் எதிர் வருகின்ற சிலுவைகளே (2)
உண்மையை புதைத்துவிட்டு உயிர்களைப் பறித்திடும்
வன்முறை சேர்க்கின்ற சிலுவைகளே (2)
வன்முறை சேர்க்கின்ற சிலுவைகளே

3. உறவுகள் உதிர்கையில் நண்பர்கள் பிரிவினில்
சோகத்தில் எனை ஆழ்த்தும் சிலுவைகளே (2)
பகைமையின் சூழலில் தனிமையின் சிறையினில்
நாளும் எனை அழுத்தும் சிலுவைகளே (2)