♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித யாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லாரன்சே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லொயோலா இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித பிரான்சிஸ்குவே, சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித செபஸ்தியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பதுவை அந்தோனியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அல்போன்சம்மாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித தந்தை பியோவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அன்னை தெரசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதர்களே, புனிதையர்களே
- எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலே, உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்)
தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால்
புத்துயிர்பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
(திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்:)
உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு,
இந்த நீருற்றை உமது அருளினால்
புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிருள்ள கடவுளின் திருமகனாகிய இயேசுவே,
உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்
- கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்.
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்
- கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்