தவக்காலம் இது தவக்காலம்

தவக்காலம் இது தவக்காலம்
விடிவுகள் மலந்திடும் அருட்காலம் (2)


1. 

இருளின் வாழ்வு கார்காலம் - அது
மறையவேண்டும் போர்க்காலம் (2)
உறுதிகள் கொள்வோம் நிகழ்காலம் - 2
உதய வாழ்வே எதிர்காலம்


2. 

உள்ளம் நிகழும் ஆராய்ச்சி அங்கு
பாவ வாழ்வின் பொருட்காட்சி (2)
கலைகள் களைந்து எழுந்திடுவோம் - 2
நிலவும் அன்பின் அரசாட்சி