கருணை தெய்வமே கண்பாரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கருணை தெய்வமே கண்பாரும்

எங்கள் பாவங்களை நீர் பொறுத்தருளும்


1. உடலும் மனமும் அறிவும் ஒன்றுசேர்ந்து

உம்மை எதிர்த்ததையா (2)

தேவ வாக்கின் வழியை மனம்

பன்முறை அறிந்தும் வெறுத்ததையா

பாவச்சேற்றை வாழ்வில் எம்வாழ்வே கொண்டு நிறைந்ததையா


2. பாதை தெளிவுறத் தெரிந்தும் - அதைப்

பார்த்து நாங்கள் நடக்கவில்லை (2)

உண்மை விளக்கு எரிந்தும் - அதன்

ஒளியின் அருகே வாழவில்லை

இறைவன் அன்பு அழைத்தும் - அதை

உணர்ந்த பின்னும் திருந்தவில்லை