♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இறைவா என்னில் தங்கிட வா
நிறைவாய் அருளைப் பொழிந்திட வா
ஒரு வார்த்தை சொல்லி என்னை தகுதியாய் மாற்றிட வா
இயேசுவே வாராய் -2 எழுந்து வாராய் -2
உறவோடு உயிரோடு கலந்திட வாராய்
1. என் பாதம் நோகாமல் என் பயணம் இனிதாக
என்னோடு என்றும் நீ வாழ்ந்திட வா (2)
எந்நாளும் என்னோடு தங்கிட வா
என் வாழ்வின் வழியாக முன்போக வா
உனில்வாழ என்வாழ்வில் அருள் தந்திடு - இயேசுவே வாராய் ...
2. உன் அருகில் எனைச் சேர்த்து உறவோடு அணைத்திட
உணர்வோடு என்னில் மகிழ்ந்திட வா (2)
பாவங்கள் புரிந்தே நான் வாழ்கின்றேன்
பரிவோடு எனை மீட்க வந்திடுவாய்
பண்போடு நான் வாழ வரம் தந்திடு - இயேசுவே வாராய் ...