♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கருணையின் உருவே இறைவா
கரையிலா அருள்நிறைத் தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா என்
கனவுகள் மெய்ப்பட வருவாய் (2)
1. பகைமையும் வெறுப்பும் அழிந்திடணும்
பகிர்வதில் மனங்கள் மகிழ்ந்திடணும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடணும்
நிம்மதி வாழ்வில் நிறைந்திடணும்
இதயங்களில் இரக்கம் வேண்டும்
இன்னல்களில் உதவ வேண்டும்
உறவுகளில் உண்மை வேண்டும் வேற்றுமைகள் மறையணும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேன்பம் -2
2. வறுமையும் பிணிகளும் ஒழிந்திடணும்
வளமையும் வாழ்வும் பெருகிடணும்
தீமையின் வேர்கள் அழிந்திடணும்
நன்மையின் பாதைகள் தெரிந்திடணும்
போர்களில்லா பூமி வேண்டும் புவியினிலே அமைதி வேண்டும்
ஆயுதங்கள் அழிய வேண்டும் அன்புலகம் மலரணும்
இந்த உலகில் உந்தன் ஆட்சி உருவானால் பேரின்பம் - 2