இறைவனில் இணைந்திட வளமுடன் வாழ்ந்திட

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனில் இணைந்திட வளமுடன் வாழ்ந்திட

வாருங்கள் வாருங்கள்

திருப்பலியினில் கலந்திட பரமனில் இணைந்திட

கூடுங்கள் கூடுங்கள் - என்றும் (2)


1. அன்பின் சாட்சியாய் நாளும் வாழ்ந்து

அவரின் உறவிலே வளர்ந்திடுவோம் (2) நம்மைப்

படைத்த இறைவன் புகழ் பாடி மகிழ்ந்திட

பாரில் அவர் நாமம் போற்றிப் புகழ்ந்திட

அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்


2. இறைவன் ஒளியிலே நாமும் இணைந்து

தியாகச் சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம் (2) இறை

வார்த்தைப் பொழிவிலே நெஞ்சம் நிறைந்திட

கருணை மழையிலே வாழ்வும் தழைத்திட

அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்