♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தேவன்பே திரு அன்பே தேடக் கிடையா திரு அமுதே
தெவிட்டாத தேனமுதே தேவுலகோர் சுவை திருவிருந்தே
1. வானத்திலிருந்து வந்த மன்னா
வந்து சிலுவையில் நொறுங்கியதேன்
வீணரெமை மோட்சம் சேர்த்திடவோ
2. வெண்பனியைப் பழிக்கும் வெண்மன்னா
வந்து சிலுவையில் கறைபட்டதேன்
எங்கள் பாவக்கறை போக்கிடவோ
3. சிங்கார வனமதின் செங்கனியே
சிதைந்து சிலுவையில் மடிந்தது ஏன்
செத்த எமக்குயிர் நல்கிடவோ