♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் ஆத்துமம் ஆண்டவரை புகழ்கின்ற வேளையிது - என்
ஆயன் அவரினிலே மகிழ்கின்ற வேளையிது
1. அன்பின் தேவனவர் தினம் அவர் குரல் கேட்டிடுவேன்
இரக்கத்தின் கடவுளவர் அவர் இதயத்தில் வாழ்ந்திடுவேன்
அவரருகினிலே நான் இருப்பேன் - தினம்
அவர் வழி தனிலே நான் நடப்பேன்
2. நீதியின் மன்னரவர் அவர் நிழலினில் வாழ்ந்திடுவேன்
மகிழ்ச்சியின் நிறைவுமவர் என் மனதினை மீட்டிடுவேன்