♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அகமருந்தாக நீயே வா என்
ஆன்ம உணவாக நீயே வா (2)
உன் அருட்கரமே என் அடைக்கலமே
உம் அருள்மொழியே என் தேவனே
என் அகமதில் குடிகொள்ள விரைந்து வா
1. பாவத்தைப் போக்கும் அரியநல் மருந்து
பாசத்தில் இணைத்திடும் திருவிருந்து (2)
பாலைவனத்தில் அன்று பொழிந்த நல் உணவு
பரிவில் குளிரச் செய்யும் முழு நிலவு
பகைமையைப் போக்கும் பரலோகம் சேர்க்கும்
மாபரன் இயேசுவே ஆட்கொள்ள வா
2. வறியவர் வாழ்வினில் வளமுடன் வாழ
வானகத் தந்தை தரும் விருந்து (2)
மனித நேயம் இம் மண்ணிலே மலர்ந்து
மலரச் செய்யும் தன் அருள் சுரந்து
மானிடர் யாவரும் மகிழ்வினில் நிலைக்க
மாண்புடன் பணிந்து ஆட்கொள்ள வா