கல்லறை மேட்டினில் மனுக்குலம்

1. கல்லறை மேட்டினில் மனுக்குலம்
கண்ணீர் சிந்தும் காட்சியினை
கருணை கண்ணால் நோக்கினார்
கவலையைக் கர்த்தர் போக்கினார்

2. அன்று கல்லறை அருகினில்
அவரும் கண்ணீர் விட்டழுதார்.
துன்புறு மனிதர் கண்ணீரை
துடைக்க அன்றே முன்வந்தார்

3. நானே உயிரும் உயிர்ப்பாவேன்.
நம்புவோர் இதனை இறந்திடார்.
என்றே உரைத்து இறந்தவனை,
எழுப்பி உண்மை அறிவித்தார்

4. மூன்று நாட்களாய் கல்லறையை
மூடிக் கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கின்படி
முவுல காள்பரன் உயிர்த்து வந்தார்