என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?

என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)

என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்

என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்