♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
சங்கமம் இனிய சங்கமம் ஆண்டவன் நம்மில் சங்கமம்
சங்கமம் இனிய சங்கமம் நாம் அன்புடன் வாழ்ந்தால் சங்கமம் (2)
அன்புடன் நட்புடன் அனைவரும் வாழ்ந்தால்
ஆண்டவன் நம்மில் சங்கமம்
உண்மையும் அறமும் உறவினில் மலர்ந்தால்
உலகத்தில் இறைவன் சங்கமம்
1. ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால் சங்கமம் இனிய சங்கமம்
ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ்ந்தால் ... ... (2)
உடைமைகளெல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால் ... ...
உளமதில் அன்பை உரமாய்க் கொண்டால் ... ...
உலகத்தில் அமையும் இறைவனின் அரசு ... ...
2. உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் அழித்தால் ... ...
உறவினில் பகைமை இல்லையென்றால் ... ... (2)
இனவெறி அழித்து இன்பமாய் வாழ்ந்தால் ... ...
இறைவார்த்தைகளே வழித்துணையானால் ... ...
இகமதில் அமையும் இறைவனின் அரசு ... ...