♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காலையில கண்விழிச்சு எழுந்ததுமே
இயேசுவே உங்கள நெனப்பேன்
இரவில உறங்கிடப் போகும் முன்னே
இயேசுவே உங்கள நெனப்பேன்
கை கூப்பி நான் கண் மூடி கவலையில்லாம வேண்டுவேன்
நான் ஆசையோடு கேக்குறத எப்போவுமே தந்திடுங்க
1. இயேசுவே உங்கள ரொம்ப புடிக்கும் பேசிட ஆசை துடிக்கும்
அழகான உங்களோட பேரு புடிக்கும்
சொல்லிச் சொல்லிப் பாக்க நினைக்கும்
கொஞ்ச நேரம் இப்ப பேசட்டுமா
கொஞ்சும் கிளி போல பாடட்டுமா
என் மேலதான் நீங்க வச்சிருக்கும்
பாசம் ஏன்தான்னு சொல்லுங்களே
2. என்னோட நண்பர்களை கூட்டிவாரேன்
எல்லோருமே விளையாடுவோம்
உங்களோட சேந்து ஆட்டம் போடுவோம்
ஊரெல்லாம் சுத்தி வருவோம்
பள்ளிக்கூடம் நாங்க போகும்போதும்
துள்ளித் துள்ளி விளையாடும்போதும்
எங்களோட நீங்க இருந்திட்டா தினம் ஆனந்தம் ஆனந்தமே
3. அம்மாவையும் அப்பாவையும் ஆசீர்வதிங்க
அனுதினம் உதவிடுங்க
ஆபத்தில கூப்பிடும் எல்லாரையும்
கைவிடாம காப்பாத்திடுங்க
யாருமில்லா ஏழைப் பிள்ளைகளின்
ஆறுதலா நீங்க இருந்திடுங்க
பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகளே இங்கு ஏராளம் ஏராளமே