நீயே எந்தன் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயே எந்தன் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம் - 2

நீயே எந்தன் தெய்வம்


1. ஆயிரம் மனிதரில் என்னைத் தேடினாய்

அன்பெனும் சிறகினுள் என்னை மூடினாய் ஆ...(2)

கண்ணென காத்திட எந்தன் நெஞ்சில் வா வா

கவலையின்றி நான் வாழ என்னில் எழுந்து வா


2. விடியுமோ பொழுதென விழிகள் கலங்கலாம்

வீணென என் மனம் சோர்ந்து போகலாம் ஆ...(2)

துணை வரும் அருளினால் என்னைத் தாங்க வா வா

துயரின்றி என் விழி மெல்ல மூட நீ வா