♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
விந்தை கிறிஸ்தேசு இராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தர மிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
1. திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவி ருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே
2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
தூய்மை அடைந்து மேன்மை யாகினேன்
3. இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக் கைஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கின்றேன்