காலம் கனிந்தது கடவுளின் செயலிது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காலம் கனிந்தது கடவுளின் செயலிது

பாலகன் நம்மிடையில் பிறந்தாரே

தந்தையின் பணியிலே தரணியை மீட்கவே

மரியின் மகனாக மலர்ந்தாரே

இயற்கையில் இணைந்தவா இரவினில் பிறந்தவா

இருளினில் ஒளியானாய் உயிரே வா

மனுக்குலம் காப்பவா மனக்குடில் பிறக்க வா

துயரினில் தனிமையில் துணையே வா

கண்ட கனவுகள் நனவாய் ஆகுமே

கண்ணே மணியே நீ மண்ணில் பிறந்ததனால்


1. உண்மைகள் உயிர்பெற உறவுகள் வளர்ந்திட

மனிதநேயமும் செழித்தோங்க

செயலினில் இறங்கிட பிறர்நலம் காத்திட

அன்பே நீயென மொழிந்தோங்க

காலம் முழுவதும் அன்பினைப் பகிரவும்

ஞாலம் முழுவதும் நல்லவை பெருகவும்

கண்மணியே எழுவாயே அருளின் காலமிது