அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்னையாய் அருளமுதாய் நல் ஆசானாய்

அருமருந்தாய் விண்ணவர்க்கரசியாய்

மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்

மாசிலாக் கன்னியாய் கர்த்தனை ஈன்ற தவமே

தவத்தின் உருப்பயனே என் தாயான அம்மா

வண்ண வண்ண லீலிமலர்

அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே

கன்னல் சுவை தேனமுதே கன்னிமரியாயே

தன்னை ஈன்று புவிக்களித்த

இறைவன் திருமகன் உன்னை

தாயாக ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே


1. அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா உனதுள்ளம்

தெள்ளுதமிழ் காவியமாய் தித்திக்கும் கருணை வெள்ளம்

வள்ள லம்மா எங்களையே வாழவைக்கும் தாய் அம்மா

எல்லை யில்லா பேரின்பத்தின் எழில்வாசல் திருவிளக்கே


2. தாளாத நோய்க் கொடுமைக் காளாகித் தவித்து நின்றோர்

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே

முத்துமாநகர் அமர்ந்த வேதநாயகன் தாயே

ஆதார நீர்ச்சுனையே ஆரோக்கிய மாமரியே