ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆணி கொண்ட உன் காயங்களை

அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2


1. வலது கரத்தின் காயமே -2 அழகு நிறைந்த ரத்தினமே

அன்புடன் முத்தி செய்கின்றேன்


2. இடது கரத்தின் காயமே -2 கடவுளின் திரு அன்புருவே

அன்புடன் முத்தி செய்கின்றேன்


3. வலது பாதக் காயமே - 2 பலன் மிகத் தரும் நற்கனியே ...

அன்புடன் முத்தி செய்கின்றேன்


4. இடது பாதக் காயமே - 2 திடம் மிகத் தரும் தேனமுதே ...

அன்புடன் முத்தி செய்கின்றேன்


5. திருவிலாவின் காயமே - 2 அருள் சொரிந்திடும் ஆலயமே ...

அன்புடன் முத்தி செய்கின்றேன்